மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும்; ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும் என ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.

அப்போது உரையாற்றிய அவர்;
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும். தொழில்நுட்பத்துறையில் உள்ள இளைஞர்களுக்கு கடன் வழங்க ₹1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. ரூ.1 லட்சம் கோடி நிதி மூலம் 50 ஆண்டுகளுக்கு ஐ.டி இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். உள்நாட்டு சுற்றுலா மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கபடும்.

நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. வருமான வரி விகிதத்தில் நேர்முக வரி, மறைமுக வரி என எந்த வரிவிதிப்பு முறையிலும் மாற்றம் இல்லை. மாத சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

வரும் நிதியாண்டில் ரூ.11.75 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

The post மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும்; ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: