மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில் முறைகேடு எனக் கூறி ரூ.826 கோடி மதிப்பிலான 350 டெண்டர்கள் பீகாரில் ரத்து

பாட்னா: பீகாரில் பாஜ கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரசுடன் கைக்கோர்த்து மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. மீண்டும் பாஜவுக்கு தாவிய நிதிஷ் குமார் பீகார் முதல்வராக ஜனவரி 29ம் தேதி பதவியேற்றார். இப்போது பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில் கிராமப்புற நீர் விநியோக திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ரூ.826 கோடி மதிப்பிலான 350 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில் முறைகேடு எனக் கூறி ரூ.826 கோடி மதிப்பிலான 350 டெண்டர்கள் பீகாரில் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: