பள்ளிகள் திரும்பிய மாணவர்களுக்கு பூங்கொத்து, சாக்லேட் கொடுத்து வரவேற்ற அமைச்சர்.. நன்றாக படித்து பெருமை சேர்க்க அறிவுறுத்தல்!!

சென்னை : கோடை விடுமுறைக்கு பிறகு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. சுமார் 45 லட்சம் மாணவர்கள் இன்று பள்ளிக்கு திரும்பு உள்ளனர். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. அதைத் தொடர்ந்து கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் வரை நடந்தது. தமிழகம் முழுவதும் மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ மாணவியருக்கு ஜூன் 12ம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளும் இதே நாளில் திறக்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து, இன்று 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

இதனிடையே சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து, சாக்லேட் கொடுத்து வரவேற்றார். வருகைப்பதிவு உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டறிந்தார்.பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ள மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாணவர்களின் நலனே முக்கியம். நன்றாக படித்து பெருமை சேர்க்க வேண்டும்,’என்றார்.

The post பள்ளிகள் திரும்பிய மாணவர்களுக்கு பூங்கொத்து, சாக்லேட் கொடுத்து வரவேற்ற அமைச்சர்.. நன்றாக படித்து பெருமை சேர்க்க அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: