வெள்ள நிவாரணம் குறித்து பேசிய போது ஒன்றிய அமைச்சர் குறுக்கீடு: எம்.பி. டி. ஆர். பாலு ஆவேசம்

டெல்லி: தமிழ்நாட்டில் வெல்ல பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி நிலைமையை உன்னிப்பாக கவனித்ததாக உள்துறை இணை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். பிற மாநிலங்களில் வெல்ல பாதிப்பை சென்று பார்த்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு வராதது ஏன் என்று மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். வெல்ல நிவாரணம் கோரி திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியபோது ஒன்றிய இணை அமைச்சர் நித்யானந்தா ராய் குறுக்கீடு வாதாடினார்.

தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் குறுக்கீடு செய்ததற்கு டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒரு ஒழுங்குடன் நடந்துகொள்ள வேண்டும் என ஆவேசமாக நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. திமுக உறுப்பினர்கள் காரசார வாதாடினார். எம்.பி.யாக பதவி வகிப்பதற்கே நித்யானந்தா ராய் தகுதியற்றவர், அவரை வெளியே அனுப்புங்கள என்று டி.ஆர்.பாலு ஆவேசமாக கூறினார்.

ஒன்றிய இணை அமைச்ச நிதியானந்தா ராய் எம்.பியாக இருக்க தகுதியில்லை என்ற டி.ஆர்.பாலு குற்றச்சாட்டை அடுத்து பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இரு கட்சி எம்.பி.க்களும் மாறி மாறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத எதையும் தான் பேசவில்லை என்று டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார். மாநில பேரிடர் நிதி என்பது வேறு, தேசிய பேரிடர் நிதி என்பது வேறு என்று தெரிவித்துள்ளார்.

The post வெள்ள நிவாரணம் குறித்து பேசிய போது ஒன்றிய அமைச்சர் குறுக்கீடு: எம்.பி. டி. ஆர். பாலு ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: