ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.50 லட்சம் வர்த்தகம்

ஒட்டன்சத்திரம் : ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் கே.கே.நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகராட்சி ஆட்டுசந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று அதிகாலை முதலே ஆட்டுச்சந்தை களை கட்டியது. திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், அய்யலூர், கன்னிவாடி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் ஆடுகளை வாங்க, விற்க குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

நேற்று ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் வெள்ளாட்டு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 வரையிலும், வெள்ளாட்டு குட்டிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.50 லட்சம் வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: