சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூவத்தூர் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தார்கள், பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கம் என்றால் அவர் பைக்கில் எடுத்து சென்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் அப்படியே இருந்துள்ளது. எனவே, வேறு ஏதாவது முன்விரோதம் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி கொலை செய்யப்பட்ட மோகன்ராஜியின் உறவினர்கள் மற்றும் வியாபாபாரிகள் சங்கத்தினர் அங்குள்ள கிழக்கு கடற்கரையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கல்பாக்கம் அருகே பயங்கரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் நடுரோட்டில் வெட்டிக்கொலை:போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
