பெலகாயில் வசிக்கும் கவுஸ்சாப் பாகேவாடியின் மகன் தஜூதின் பாகேவாடி. இவரும் ராணுவ அதிகாரியாக ஜான்சியில் வேலைபார்க்கிறார். இவரது மனைவி தான் சோபியா குரேஷி. இவர் ராணுவத்தில் ஏசியான் பிளஸ் படை 18க்கு தலைமை வகிக்கிறார். தற்போது ஜம்முவில் இவர் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்க இவரை பாதுகாப்பு துறை நியமித்தது பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து அவரது மாமனார் பாகேவாடி கூறியதாவது, ‘கர்னல் சோபியா குரேஷி தொலைக்காட்சியில் தோன்றியது முதல் எனது வீடு ரம்ஜான் கொண்டாட்டம் போல் காணப்படுகிறது. எனது மகன், மருமகள் பிள்ளைகள் தொடர்ந்து நாட்டுக்காக பாடுபடுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார்.
The post மாமனாரை சந்தித்து பாராட்டு மழை பெலகாவியில் கர்னல் சோபியா குரேஷி வீட்டில் திரண்ட மக்கள் appeared first on Dinakaran.
