டெல்லியில் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!

புதுடெல்லி: டெல்லியில் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 17 பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடங்களை இடித்து அகற்றுகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அதிரடிப்படை போலீசார் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பொதுமக்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சி, கண்ணீர் புகை வீசப்பட்டதால் பலர் காயம் அடைந்தனர்.

ராம்லீலா மைதானம் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றினர். டெல்லியில் ராம்லீலா மைதானம் அடுத்த துர்க்மான்கேட் மசூதி அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் அதிகாலையில் அகற்றினர் . கட்டிடங்களை இடித்து தள்ளிய டெல்லி அரசின் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: