மசூதி சேதப்படுத்தப்பட்டதால் நேபாளத்தில் திடீர் பதற்றம் இந்திய எல்லை மூடல்: இந்து தெய்வங்களுக்கு எதிராக கோஷம்

பீர்கஞ்ச்: நேபாளத்தில் தனுஷா மாவட்டத்தின் கமலா நகராட்சியைச் சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமானத் அன்சாரி என அடையாளம் காணப்பட்ட இரண்டு முஸ்லிம் இளைஞர்கள், சில மத சமூகங்களை அவமதிக்கும் கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து நேபாளத்தில் பதற்றம் தொடங்கியது. அந்தக் காணொளி விரைவில் தனுஷா மற்றும் பார்சா மாவட்டங்களில் வகுப்புவாத பதற்றத்திற்கு ஒரு தூண்டுதலாக மாறியது.

உள்ளூர்வாசிகள் விரைவில் அந்த இருவரையும் பிடித்து, அந்தக் காணொளி வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே, கமலாவின் சகுவா மாரன் பகுதியில் ஒரு மசூதி சேதப்படுத்தப்பட்டது. இது வகுப்புவாத பதற்றத்தை அதிகரித்து மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தினர். அப்போது இந்து அமைப்புகள் தங்கள் தெய்வங்களுக்கு எதிராக இழிவான கருத்துக்கள் கூறப்பட்டதாகக் குற்றம் சாட்டின.

இதை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியும், உள்ளூர் காவல் நிலையத்தை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பார்சா நகரில் போராட்டங்கள் வெடித்தன. பீர்கஞ்ச் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியா-நேபாள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சஷஸ்திர சீமா பால் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்திய எல்லைகளை முழுமையாக மூடினர்.  அவசர சேவைகளைத் தவிர, எல்லையில் சாதாரண குடிமக்களின் நடமாட்டத்தை இந்திய பாதுகாப்புப் படைகள் முழுமையாக நிறுத்தியுள்ளன. இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் மைத்ரி பாலத்தில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் தலைவர் ஹாதியின் கொலைக்கு நீதி கோரி அவரது இன்குலாப் மன்ச் அமைப்பு சார்பில் டாக்காவில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில், வங்கதேசத்தில் வசிக்கும் அனைத்து இந்தியர்களின் பணி அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: