திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர். வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்குலமாக வந்து கொண்டனர். அந்த நேரத்தில் கோயிலுக்கு உள்பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அந்த யானை அலங்கரிக்கப்பட்டு அந்த யானை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு செல்வதற்காக பாகன்கள் வந்து அந்த யானை அழைத்து வந்தனர். அப்பொழுது அந்த யானை திடீரென மிரண்டது. அந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவருமே சிதறி ஓடினர்.
ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்எனில் அந்த யானையின் இரண்டு கால்களுக்கும் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது. இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டு பாகங்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு அவர்கள் வந்து மீண்டு அந்த யானை சமாதானம் படுத்தி பிரச்சனைகளை தீர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.
