கடந்த 3 வாரங்களாக ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவில்லை: ரிலையன்ஸ் தகவல்

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்காவிட்டால் இந்திய இறக்குமதி பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே, குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள சிக்கா துறைமுகத்தை நோக்கி 22 லட்சம் பேரல்கள் ரஷ்ய எண்ணெய் கொண்ட 3 கப்பல்கள் சென்று கொண்டிருப்பதாக ப்ளூம்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜாம்நகரில் உள்ள ரிலையன்சில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இந்த எண்ணெய் அனுப்பப்பட்டிருப்பதாக ப்ளூம்பர்க் கூறி உள்ளது. இந்த தகவலை ரிலையன்ஸ் மறுத்துள்ளது. அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு மையம் கடந்த 3 வாரங்களாக எந்த ரஷ்ய எண்ணெயையும் பெறவில்லை ’ என கூறி உள்ளது.

Related Stories: