ராகுல் பேச்சில் 23 பகுதி நீக்கம்

புதுடெல்லி: பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி, “பாஜ மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது,” என்று 36 நிமிடங்கள் ஆவேசமாக பேசியிருந்தார். இந்த உரை நாடாளுமன்றத்தின் இணையதள பக்கத்தில் வெளியான நிலையில், பிரதமரை குற்றம் சாட்டி பேசியவை, அதானியை பற்றி பேசியவை உட்பட மொத்தம் 23 பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. இதில் பாரத மாதா என்று குறிப்பிட்டு பேசிய சில பகுதிகளும் அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகரால் நேற்று முன்தினம் இரவு நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல், “பாரத மாதா’’ என்ற வார்த்தை தற்போதைய இந்தியாவில் பயன்படுத்துவதற்கு பொருத்தமற்ற, தகாத வார்த்தையாகி விட்டது போலும்,” என்று கூறினார்.

The post ராகுல் பேச்சில் 23 பகுதி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: