பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் 28,626 பேர் வேட்புமனு தாக்கல்: 3,139 பெண் வேட்பாளர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 28,626 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன்(டிச.24) முடிவடைந்தது. ஜனவரி 12 வரை வேட்பாளர்கள் தங்கள் மனுவை திரும்ப பெறலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப், அவரது தம்பி ஷெபாஸ் ஷெரீஃப், யூசுப் ரசா கிலானி, ராஜா பர்வைஸ் அஷ்ரப் உள்ளிட்ட முன்னாள் பிரதமர்கள், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் என்ற கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் தேசிய சட்டப்பேரவை மற்றும் 4 மாகாண பேரவைகளுக்கு 28,626 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 3,139 பேர் பெண்கள் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் 28,626 பேர் வேட்புமனு தாக்கல்: 3,139 பெண் வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: