அதிகாரிகளை கண்டதும் டிரைவர்கள் தப்பி ஓட்டம் ஆரல்வாய்மொழியில் 29 டாரஸ் லாரிகள் பறிமுதல்-₹13 லட்சம் அபராதம்

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழியில் பாறை கற்களை ஏற்றி வந்த 29 டாரஸ் லாரிகள் மறைவிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளை கண்டதும் டிரைவர்கள் தப்பி ஓடினார். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து தலா ₹45 ஆயிரம் வீதம் ₹13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கனிம வளங்கள் திருடப்படுவதாகவும் இக்கனிம வளங்கள் சட்டவிரோதமாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கனிமவளங்கள் கடத்தலை தடுக்க குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளாப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவல்கிணறு-நாகர்கோவில் நான்கு வழி சாலையில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு வரும் இணைப்புச் சாலையில் ஒரு தனியார் இடத்தில் சுமார் 29 டாரஸ் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் அதிகளவு பாறைக்கற்கள் ஏற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன.அதன் அடிப்படையில் நாகர்கோவில் டிஎஸ்பி நவீன், வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் கோபி, தோவாளை தாசில்தார் வினைதீர்த்தான், ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்டதும் 29 டாரஸ் லாரிகளில் இருந்த ஓட்டுநர்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனையடுத்து ஒரு டாரஸ் லாரிக்கு ₹45 ஆயிரம் வீதம் 29 டாரஸ் லாரிகளுக்கும் மொத்தம் ₹13 லட்சத்து 5000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 29 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

The post அதிகாரிகளை கண்டதும் டிரைவர்கள் தப்பி ஓட்டம் ஆரல்வாய்மொழியில் 29 டாரஸ் லாரிகள் பறிமுதல்-₹13 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: