கும்பம்

சுக்கிரனின் பார்வை காரணமாக சாதகமான நிலை இருக்கும். மகள் திருமண விஷயமாக உறவினரிடமிருந்து சந்தோஷமான செய்தி வரும். கல்வி வகையில் செலவுகள் உண்டாகும். புதிய செல்போன், கம்ப்யூட்டர் வாங்குவீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் உத்யோக வகையில் நல்ல மாற்றங்கள் வரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிட்டும். ராகு 4ல் இருப்பதால் வயிறு, ஆஜீரணக் கோளாறுகள் வரலாம். கர்ப்பமாக இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது மிகமிக அவசியம். தொழில் சீராக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கடன்பாக்கிகள் வசூலாகும்.

பரிகாரம்: தினசரி விநாயகர் அகவல் படிக்கலாம், கேட்கலாம். வீட்டு வேலை செய்யும் ஏழைப் பெண்களுக்கு உதவலாம்.

>