(8.1.2026 முதல் 14.1.2026 வரை)
சாதகங்கள்: ராசியில் புதன் வந்து அமரப் போகிறார். இடமாற்றங்களும் பிரயாணங்களும் உண்டு. ராசிநாதன் சனி, மூன்றாம் இடத்தில் அமரப் போவதால், அதற்கான பலாபலன்கள் ஆரம்பித்துவிடும். இதுவரை இருந்த குடும்ப சிக்கல்கள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். ராகு இரண்டாம் இடத்தில் இருப்பதால் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கா விட்டாலும் புதிய வெளிச்சம் கிடைக்கும். நம்பிக்கை பிறக்கும். இரண்டாம் இடத்தைக் குரு பார்ப்பதால், குடும்ப உறவுகளில் உள்ள குழப்பங்கள் நீங்கும். கருத்து வேறுபாடுகள் குறையும். பொருளாதாரம் முன்னேற்றமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். வணிகத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள்.
கவனம்தேவை: அஷ்டமத்தில் கேது இருப்பதால் எந்த விஷயத்தையும் உள்ளுக்குள் போட்டு முழுங்க வேண்டாம். தகுந்த ஆலோசனை கேட்டு, தீர்வுகளைக் காணும் முயற்சியில் இறங்குங்கள். பிறருக்கு வாக்குறுதி தருவதில் எச்சரிக்கையுடன் இருங்கள். எதிர் பாராத செலவுகள் ஏற்படும். காரணம் விரயஸ்தானம் பலப்பட்டு இருக்கிறது. செலவுகளின் கவனம் தேவை. சிக்கனம் முக்கியம்.
சந்திராஷ்டமம்: 6.1.2026 இரவு 12.17 முதல் 8.1.2026 மாலை 6.39 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: பறவைகளுக்குத் தானியம் போடுங்கள். காகத்திற்கு உணவிடுங்கள். வாரம் ஒரு முறையாவது யாராவது ஒரு ஏழைக்கு உணவு தாருங்கள்.
