(4.7.2026 முதல் 10.7.2026 வரை)
சாதகங்கள்: ராசியில் குரு சுக்கிரன் இருந்தாலும் வாரத் துவக்கத்திலேயே சுக்கிரன் தனஸ்தானத்திற்குச் செல்கிறார். சுகாதிபதி தனஸ்தானத்திற்கு வருவதால் சுகங்கள் ஓங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு கட்டுபவர்கள் தடை இன்றி கட்டுவார்கள். தேவையான உதவிகளும் பொருளாதாரமும் கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். அன்னியோன்யம் அதிகரிக்கும். பாகஸ்தர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மாறி சமரசம் கிடைக்கும். கூடுதல் சம்பளத்திற்காக நல்ல உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
கவனம் தேவை: ராசிக்குள் குரு பகவானும் இரண்டாம் இடத்தில் கேதுவும் அஷ்டமத்தில் ராகுவும் இருப்பதை மறந்துவிட வேண்டாம். வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. பிரயாணங்களின் பொழுது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். தந்தையின் ஆரோக்கியத்திலோ பிரச்னைகள் வரலாம். கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 4.7.2026 பகல் 12.48 முதல் 6.7.2026 காலை 9.57 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: அருகாமையில் எந்தக் கோயில் இருந்தாலும் அங்கு மனமார வேண்டி ஒரு தீபம் ஏற்றி வாருங்கள்.
