×

துலாம்

28.11.2024 முதல் 4.12.2024 வரை

சாதகங்கள்: பத்தில் செவ்வாய் இருக்கின்றார். வக்கிரமாக இருக்கின்றார் தொழில் கவனம் தேவை. பிறரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். ராகு ஆறில் பலம் பெற்று இருப்பதால், கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தால், எதிலும் வெற்றி பெற்றுவிடலாம். வருமானம் உயரும் சகோதர உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் ஓரளவு நீங்கள் நினைத்தபடி முடிவாகும். மனதில் தைரியம் பிறக்கும். உத்தியோக சூழல் உங்களுக்கு ஏற்ற தாகவே இருக்கும். ஆனால் எல்லா விஷயத்திலும் பொறுமை முக்கியம். ராசிநாதன் மூன்றாம் இடத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் மிகுந்த நன்மைகள் ஏற்படும்.

கவனம் தேவை: இட மாற்றம் உத்தியோக மாற்றம் சிலருக்கு ஏற்படும். சனி செவ்வாய் இணைப்பு அவ்வளவு நல்லதல்ல. கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள் இழுபறியாக இருக்கும். நீங்கள் நினைத்தபடி சில காரியங்கள் நடக்காமல் போகும். எதிரிகள் தொல்லை கஷ்டப்படுத்தலாம். அதனால், எதையும் திட்டமிட முடியாத ஒரு சூழலும் ஏற்படலாம். எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். ஐந்தாம் இடத்தில் சனியும், 12-ஆம் இடத்தில் உள்ள கேதுவும், மனதில் எப்பொழுதும் ஒரு நெருடலையும் தயக்கத்தையும் தந்து கொண்டிருக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியையும் குலதெய்வத்தையும் வழிபாடு செய்யுங்கள். மனம் போல் நடக்கும்.

Tags :
× RELATED மீனம்