×

தனுசு

(4.7.2026 முதல் 10.7.2026 வரை)

சாதகங்கள்: ராசிக்கு மூன்றில் உப ஜெய ஸ்தானத்தில் ராகு இருப்பது சிறப்பு. அஷ்டமத்தில் இருந்த லாபாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் வருவதும் சிறப்பான பலனைத் தரும். ஆறில் உள்ள செவ்வாய் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைத்து தன்னம்பிக்கையைத் தரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் உயரும். தடைபட்ட வேலைகளை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நல்ல முறையில் முன்னேறுவார்கள். ராசிநாதன் குரு ராசிக்கு இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் பிரச்னை வராது. வியாபார நெருக்கடிகள் தீர்ந்து, தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

கவனம் தேவை: ராசிக்கு நான்காம் இடத்தில் சனி பகவானும் எட்டாம் இடத்தில் ராசிநாதனும் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சில நேரங்களில் கடன் வாங்க வேண்டி இருக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண
முயற்சிகளில் சில சோதனைகளும் தாமதங்களும் ஏற்படும். எதிலும் அவசரப்பட வேண்டாம். நான்காம் இடத்தில் சனி இருப்பதால் பணி செய்யும் இடத்தில் கவனமாக இருங்கள். மேலதிகாரிகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

பரிகாரம்: எட்டாம் இடத்தில் ராசிநாதன் இருப்பதால் வியாழக்கிழமை விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

 

Tags :
× RELATED மீனம்