×

கும்பம்

19.2.2026 முதல் 25.2.2026 வரை

சாதகங்கள்: ராசிநாதன் சனி ராசிக்கு நன்மையைச் செய்வார். கஷ்டத்தில் விடமாட்டார். குருவின் பார்வையும் ராசியில் விழுவதால் அனுகூலமாகவே இருக்கிறது. இரண்டுக்குரிய குரு ஐந்தில் இருப்பதால் பொருளாதாரம் சீர்பெறும். பொருளாதாரத்தில் உள்ள மந்தநிலை மாறும். தேவைக்கு வேண்டிய பணம் கிடைத்துவிடும். மனைவி அல்லது கணவன் வழியில் தனவரவு உண்டு. சுபகாரியத் தடைகள் விலகும். தாய் வழி ஆதரவு உண்டு. கல்வி தொடர்பான முயற்சிகள் பலனளிக்கும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு பயணம் சாதகமாகும்.

கவனம் தேவை: திடீர் திடீரென்று கோபதாபங்கள் ஏற்படும். உணர்ச்சி வசப்பட்டு தன்னிலை இழப்பது கூடாது. எதையும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்காமல் பேசி சங்கடப்பட வேண்டாம். தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம். சரும நோய் பாதிப்புண்டு. தலைவலி, கண்வலி பிரச்னைகள் அதிகரிக்கும். சகோதர வழியில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.

பரிகாரம்: வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளியுங்கள்.

Tags :
× RELATED மீனம்