(8.1.2026 முதல் 14.1.2026 வரை)
சாதகங்கள்: தொழில் ஸ்தானத்தில் குரு இருந்தாலும், அவர் சுக ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. அதோடு உங்களுக்கு அளப்பரிய நன்மையைத் தருகின்ற ராகுவை, குரு பார்ப்பதால், ராகுவால் ஏற்படும் நற்பலன்கள் அதிகரிக்கும். குருவும் செவ்வாயும் பார்வையால் இணைவதால் குரு மங்கள யோகமும், குரு சுக்கிர யோகமும் சுக ஸ்தானத்திற்குக் கிடைக்கிறது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டு. தனஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதாரத்தில் சிறப்பு உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைத்துவிடும். கடன்களின் ஒரு பகுதி அடையும். தொழில் முன்னேற்றமாக நடைபெறும். தெய்வ தரிசனமும் பெரியோர்கள் ஆசிகளும் உண்டு.
கவனம்தேவை: ஏழாம் இடத்தைச் சனி நெருங்குவதால், குடும்ப உறவுகளில், சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அரசாங்க விரோதம் வேண்டாம். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். ஜாமின் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை.
பரிகாரம்: ஏழைகளுக்கு இயன்ற அளவு உதவி செய்யுங்கள். குலதெய்வத்தை தினம் நினைத்துக் கொள்ளுங்கள்.
