(18.12.2025 முதல் 24.12.2025 வரை)
சாதகங்கள்: இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த குரு லாபஸ்தானத்திற்கு மாறுவது சிறந்த அமைப்பு. செலவுகள் குறையும். அதைவிட ஐந்தாம் இடம் பலப்படுகிறது. குருவும் அந்த இடத்தைப் பார்க்கிறார். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரம் மேம்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். நீங்கள் தரவேண்டிய கடனையும் அடைக்கும் வாய்ப்புண்டு. தடைபட்ட காரியங்கள் படிப்படியாக நடைபெறும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் வெற்றிபெறும். பிள்ளைகளின் படிப்பு முயற்சிகள் வெற்றி அடையும். தாய்வழி உறவுகளும் உதவி செய்யும். சகோதரர்கள் உதவியும் உண்டு.
கவனம் தேவை: தந்தை மகன் உறவுகளில் கவனம் தேவை. அவசர முடிவுகளால் அவஸ்தைப்படும் வாய்ப்புகள் உண்டு. சனி அஷ்டமத்தை நோக்குவதால், எதிர்பாராத சிரமங்களும் தடைகளும் தாமதமம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும், மனைவி / கணவருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். அவ்வப்பொழுது மனக்குழப்பங்கள் ஏற்படும். பணியிட மாற்றங்கள் உண்டு. தொழில் போட்டி அதிகரிக்கும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். நன்மை கிடைக்கும்.
