×

மீனம்

(4.7.2026 முதல் 10.7.2026 வரை)

சாதகங்கள்: பாக்கியாதிபதி மற்றும் தன குடும்ப அதிபதி செவ்வாய் உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. குருவின் பார்வை ராசியில் விழுவதால் ஏழரைச் சனியின் தோஷம் மட்டுப்படும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். பழைய பிரச்னைகள் படிப்படியாக தீரும். குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கி சந்தோஷமும் அமைதியும் திரும்பும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வணிகத்தில் லாபம் உயர
ஆரம்பிக்கும். வாடிக்கையாளர்களைக் கவர ஏற்பாடுகளைச் செய்வீர்கள் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

கவனம் தேவை: ராசியில் சனி இருப்பதாலும் அவர் விரயாதிபதியாக இருப்பதாலும் எத்தனை தான் பணம் வந்தாலும் ஏதோ ஒரு வழியில் அது செலவழிந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத மனக்கவலைகள் உருவாகலாம். சில நேரங்களில் அடுத்து என்ன செய்வது என்று இருட்டு அறையில் இருப்பது போல ஒரு மனநிலையில் இருக்கலாம். பிரம்மாண்டமான எண்ணங்கள் நிறைவேறவில்லையே என்ற ஏக்கம் வரும்.

பரிகாரம்: பசுக்களுக்கும் பறவைகளுக்கும் உணவு தாருங்கள். வெயிலுக்கு நீரும் வையுங்கள்.

Tags :
× RELATED கும்பம்