×

மிதுனம்

18.4.2024 முதல் 24.4.2024 வரை

சாதகங்கள்: 3-க்குரிய சூரியன் லாபஸ்தானத்தில் குருவோடு இணைந்து இருக்கின்றார். அவர் மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால், வலிமையான எண்ணங்களும் செயல்களும் இருக்கும். அரசாங்க பதவிகள் கிடைக்கும் வாய்ப்புண்டு. ராசிநாதன் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று நீசபங்கமும் அடைவதால் வலிமை பெறுகின்றார். கடன் சுமை குறையும். மனதில் உற்சாகம் பிறக்கும். காரியத் தடைகள் அகலும். பயணங்களால் ஆதாயம் உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகிழ்ச்சியான தகவல்கள் வரும். திடீர் வரவுக்கும் வாய்ப்பு உண்டு.

கவனம் தேவை: வாரத்தின் தொடக்கத்தில் செவ்வாய் சனி தொடர்புகள் பெற்றோர் வழியில் பிரச்னைகளைத் தரும். உதவுகிறேன் என்று சொல்பவர்கள் கைவிட்டு விடுவார்கள். ஏமாற்றம் அதிகரிக்கும். யாரையும் நம்பி செயல்பட முடியாத நிலை உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. இடம் வாங்குதல் விற்றல் முதலியவற்றை கவனமாக செய்யவும். இல்லை ஏமாற நேரும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும்.

பரிகாரம்:திருமாலை வழிபட தீங்குகள் அகலும். லட்சுமி நரசிம்மரை தவறாமல் ஆராதித்து வாருங்கள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்