கூட்டத்தில் மினி பஸ் புகுந்தது 3 வயது குழந்தை பரிதாப பலி: 5 பேர் படுகாயம்; டிரைவர் கைது

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் மினிபஸ் புகுந்ததில் 3 வயது குழந்தை பரிதாப இறந்தது. படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்த சேர்ந்தவர் மாரீஸ்வரன். மினி பஸ் டிரைவர். இவர் இன்று காலை அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் பகுதியில் இருந்து திருக்குமரன் நகருக்கு பயணிகளை ஏற்றிச் சென்றார்.

கண்டக்டராக அருப்புக்கோட்டை ராஜீவ்நகரை சேர்ந்த ராஜீவ் சென்றார். 10க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்த மினி பஸ் அங்கு பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் திடீரென புகுந்ததால் அங்கிருந்தவர்கள் ஓடினர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் அருகிலிருந்த ஆட்டோ மீது மோதியதில் பாலவநத்தத்தை சேர்ந்த அஜ்மீர் ரோஜா, இவரது குழந்தைகள் தானிஷ் அமகது (3), தானிஷ் முகமது (9), அஜ்மீர் ரோஜாவின் பாட்டி மீரான் பீவி (70), அருப்புக்கோட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருப்பசாமி, நெசவாளர் காலனி லட்சுமிபிரியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை தானிஷ் அகமது உயிரிழந்தது.அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வந்து படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவர் மாரீஸ்வரனை கைது செய்தனர்.

The post கூட்டத்தில் மினி பஸ் புகுந்தது 3 வயது குழந்தை பரிதாப பலி: 5 பேர் படுகாயம்; டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: