ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் இலங்கை அருகே நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் வழியாக நகர்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகளில் நாளை மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை ெகாண்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையை பொருத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Related Stories: