பாட திட்டங்கள் மாற்றம் 10ம் தேதி பின் கருத்துக்கேட்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

திருவெறும்பூர்: திருச்சி காட்டூர் உருமு தனலட்சுமி கலை கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை வகித்து 1,997 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்பை வழங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டி: மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரத்துடன் வடிவமைக்கப்பட்ட லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து வரும் 10ம் தேதிக்கு (நாளை) பிறகு கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. அதன் அடிப்படையில் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடத்தவுள்ளோம். அவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனையின்பேரில் புதுமைகளை கொண்டு வந்து செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: