பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 31ம் தேதி முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு

சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு வரும் 31ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று உரிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக கடந்த டிசம்பர் 26ம் தேதி பிற்பகல் முதல் நேற்று வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மாணவர்களின் நலன்கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கால அவகாசம் வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: