மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 208 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 225 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 8400 கனஅடியில் இருந்து நேற்று காலை முதல் 6400 கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 99.84 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 99.35 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 64 டி.எம்.சி.யாக உள்ளது.
