நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் : மெட்ரோ நிர்வாகம் அறிக்கை!!

சென்னை :சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சத்து 1210 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 3-ந் தேதி அனைத்து மக்களும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,”நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 80 லட்சத்து 1210 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.அதிகபட்சமாக 10.11.2023 அன்று 3 லட்சத்து 35 ஆயிரத்து 677 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2023, நவம்பர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 32 லட்சத்து 33 ஆயிரத்து 705 பேர் பயணம் செய்துள்ளது. (Online QR 1,99,218; Static QR 1,46,485; Paper QR 24,37,942; Paytm 2,34,981; Whatsapp 2,11,758; PhonePe 3,321).

பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39 லட்சத்து 98 ஆயிரத்து 883 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 56 ஆயிரத்து 505 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 3 ஆயிரத்து 769 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 7 லட்சத்து 8 ஆயிரத்து 351 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் 5 ரூபாய் என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அந்நாளில் ஒவ்வொரு பயணத்திற்கும் வெறும் 5 ரூபாய் என்ற கட்டணத்தில் அன்று ஒரு நாள் மட்டும் பயணம் செய்து கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணத்தை வழங்குகிறது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சென்னை மாவட்ட மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் : மெட்ரோ நிர்வாகம் அறிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: