அமெரிக்க அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை கோயில் சிலை: சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை

மயிலாடுதுறை: அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை 1970 முதல் இருப்பதாக அருங்காட்சியக வலைதளம் மூலம் சென்னை சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, 1958ல் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், வீணாதார தட்சிணாமூர்த்தி சிலையின் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்த போது இரண்டும் ஒரே சிலைதான் என்பதும், வீரட்டேஸ்வரர் கோயிலில் கொள்ளை போனது என்றும் உறுதியானது.

இந்நிலையில் நேற்று திருச்சி சிலை தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் குழுவினர் கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். அமெரிக்காவில் இருந்து அந்த சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஎஸ்பி பாலமுருகன் தெரிவித்தார்.

The post அமெரிக்க அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை கோயில் சிலை: சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: