மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்பிக்கள் நாளை பதவியேற்பு

சென்னை: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 39 எம்பிக்கள் நாளை பதவியேற்கின்றனர். இந்தியாவின் 18 மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

அதே நேரத்தில் பாஜ அரசு கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் புதிய எம்பிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதனால், இன்று முதல் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். இதற்கிடையில் தமிழக எம்பிக்கள் அனைவரும் நாளை பதவியேற்கிறார்கள்.

இதுதொடர்பாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிகுமார் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”விசிக தலைவர் திருமாவளவன், நான் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்கள் ஜூன் 25ம் தேதி(நாளை) பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவி ஏற்கிறோம். முதல் நாளான ஜூன் 24ல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 280 பேர் பதவி ஏற்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

The post மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்பிக்கள் நாளை பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: