மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்துக : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வலியுறுத்தல்

மணிப்பூர் : மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைநகர் சென்னையில் பொதுச்செயலாளர்அருணாச்சலம் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் துணைத்தலைவர் மௌரியா தலைமையிலும், கோயம்புத்தூரில் துணைத்தலைவர் தங்கவேலு கோவை தலைமையிலும்,

மதுரையில் இளைஞரணி மாநிலச் செயலாளர் கவிஞர் ஸ்நேகன் தலைமையிலும்,சேலத்தில் மாநிலச் செயலாளர் தலைமையிலும், நாகப்பட்டினத்தில் பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் வைத்தீஸ்வரன் தலைமையிலும், திருநெல்வேலியில் நெல்லை மண்டலச் செயலாளர் மருத்துவர் D. பிரேம்நாத் தலைமையிலும், திட்டக்குடியில் விழுப்புரம் மண்டலச் செயலாளர் ஸ்ரீபதி தலைமையிலும் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மய்ய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும். இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்துக : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: