கோவையில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்

கோவை: கோயமுத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த குமார், மனோஜ் ஆகியோரின் குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், சின்னவேடம்பட்டி கிராமம், மஜரா உடையாம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவில் நேற்று (31.05.2024) மாலை சுமார் 4.30 மணியளவில் தனியருக்குச் சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பிக்கிலி அஞ்சல், பொதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 29) த/பெ.கோவிந்தன் மற்றும் ஒரிசா மாநிலம், கஞ்சம், சந்திராபூரைச் சேர்ந்த மனோஜ் (வயது 27) த/பெ. ஹார்டு பிகாரா ஆகிய இருவரும் கட்டிடம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் மேற்படி இரண்டு நபர்களும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

The post கோவையில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: