இதுதவிர வனப்பகுதியில் வெட்டப்படும் செம்மரம், தேக்கு, சவுக்கு ஆகியவற்றுக்கு கடும் கிராக்கி உள்ளதால் தனி நபர்களுடன் சிலர் கூட்டணி வைத்துக்கொண்டு இரவோடு இரவாக மரங்களை வெட்டி விற்பனைக்கு அனுப்பிவைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் கொண்டமாநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை அத்துமீறி வெட்டி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அபகரிப்பு குறித்து சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தபிறகும் வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதை பயன்படுத்தி நில ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து மரங்களை வெட்டுவது நிலத்தை ஆக்கிமிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலைமை நீடித்தால் மீதமுள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலமும் காணாமல்போயிடும் என்று கூறுகின்றனர். ஆகவே, வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அதில் உள்ள மரங்களை வெட்டி கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
The post கும்மிடிப்பூண்டி சாணபுத்தூர் ஊராட்சியில் வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் விலையுயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்: ஆக்கிரமிப்பால் சுருங்கிவரும் நில பரப்பு appeared first on Dinakaran.
