கோத்தகிரி- கொடநாடு இடையே பூத்துக்குலுங்கும் ஜப்பானின் தேசிய மலர்

*சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கோத்தகிரி : கோத்தகிரியில் இருந்து கொடநாடு காட்சி முனை செல்லும் சாலையில் பூத்துக்குலுங்கும் ஜப்பானின் தேசிய மலரான செர்ரி ப்ளாசம் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் பூத்துக்குலுங்கும் ஜப்பானின் தேசிய மலரான செர்ரி மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளன. இவ்வகை பூக்கள் ஜப்பானிய செர்ரி அல்லது சகுரா என்று அழைக்கப்படுகிறது.

இந்த பூக்கள் ப்ரூனஸ் அல்லது ப்ரூனஸ் துணை இனத்தை சேர்ந்த செராசஸ் மரங்களின் பூவாகும்‌.இவ்வகை பூக்கள் பொதுவாக அலங்காரம் செய்வதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் சாலையோரங்களில் அதிக அளவு காணப்படுகிறது.இவற்றை நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை பார்த்து செல்வதுடன் தங்களின் சுற்றுலா நினைவுகளை பதிவு செய்யும் வகையில் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

The post கோத்தகிரி- கொடநாடு இடையே பூத்துக்குலுங்கும் ஜப்பானின் தேசிய மலர் appeared first on Dinakaran.

Related Stories: