மேலும், பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த 14 பெண்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி ஆகியோர் விருதுகளையும், நினைவு பரிசையும் வழங்கினர். மேலும், மகப்பேறு மருத்துவர் இந்திராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் கல்வித்துறை அதிகாரிகள் உதயகுமார், சிவக்குமார், திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு, தனியார் அமைப்பின் நிர்வாகி தேவமனோகரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.
