தவறுதலாக எண்ணை மாற்றி அழைத்த இளம்பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசியவர் கைது

 

குன்றத்தூர், ஜன.6: தவறுதலாக எண்ணை மாற்றி அழைத்த இளம்பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியவர் கைது செய்யப்பட்டார்.
அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஒருவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு வீடியோ கால் வந்தது. அந்த இளம்பெண்ணின் கணவர், அந்த அழைப்பை எடுத்துள்ளார். அப்போது, எதிர் முனையில் பேசியவர், நிர்வாணமாக நின்றபடி, உனது மனைவியிடம் போனை கொடு, என கூறியதுடன், முகப்பேர் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு வந்து என்னை சந்திக்க வேண்டும், என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த தங்ககாமு (43) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். விசாரணையில், தங்ககாமு சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருவதும், மேற்கண்ட இளம்பெண் கடந்த மாதம் தவறுதலாக தங்ககாமு செல்போன் எண்ணிற்கு அழைத்ததும், பின்னர், தெரியாமல் எண்ணை மாற்றி போட்டுவிட்டதாக மன்னிப்பு கேட்டுவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார்.
அந்த எண்ணை வைத்து, தங்ககாமு வீடியோ கால் செய்து தொந்தரவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: