உத்திரமேரூர், ஜன.5: உத்திரமேரூர் அடுத்த, சோழனூர் கிராமத்தில் ஒன்றிய திமுக விளையாட்டு அணி சார்பில், திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்ட கிரிக்கெட் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர்கள் தயாளன், உமாபதி, நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சித் தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழனூர், காவனூர் புதுச்சேரி, மேனல்லூர், பாரதிபுரம், அரசாணிமங்கலம் மற்றும் பூந்தண்டலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விளையாட்டு அணி வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட அளவிளான போட்டி தேர்வுகளில் பங்கேற்பது மட்டுமின்றி, தக்க கேடையங்களும் சன்மானம் வழங்கி ஊக்குவிக்கப்பட உள்ளது.
