தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு நிவாரண உதவி

 

திருப்போரூர், ஜன.6: திருப்போரூர் ஒன்றியம், மேலையூரில் தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு நிவாரண உதவியை, திருப்போரூர் வட்டாட்சியர் வழங்கினார்.
திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மேலையூர் கிராமத்தில் கடந்த மாதம் 25ம் தேதி மின் கசிவு காரணமாக செல்வி என்பவரின் கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த, விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இந்நிலையில் திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் தீ விபத்தில் உடமைகளை இழந்த வீட்டின் உரிமையாளர் செல்விக்கு வேட்டி, சேலை, அரிசி மூட்டை, பருப்பு, மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர்.

Related Stories: