சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் லாவோஸில் மீட்பு

புதுடெல்லி: லாவோஸில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மோசடி மையங்களில் இருந்து மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு வாக்குறுதிகளால் கவரப்பட்ட இந்தியர்கள், சைபர் மோசடி கும்பல்களின் கைகளில் சிக்கி, அங்கு இணைய குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து லாவோஸ் நாட்டின் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘லாவோஸின் பொக்கியோ மாகாணத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில், சைபர் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 இந்தியர்கள் அந்நாட்டின் காவல்துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

அதில் 30 பேர் பத்திரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 17 பேர் விரைவில் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதேபோல், லாவோஸில் உள்ள சில சைபர் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 13 இந்தியர்கள் கடந்த மாதம் இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டனர். இதுவரை போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்’ என்று ெதரிவிக்கப்பட்டது.

The post சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் லாவோஸில் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: