இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் வழியில் ரோகித் சர்மா.. உதவியாளர்களுக்காக பரிசுத் தொகையை விட்டுத்தர சம்மதம்!!

மும்பை: ராகுல் திராவிட்டை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் தனது பரிசுத் தொகையை விட்டுத்தர முன்வந்திருக்கும் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா ஏற்கெனவே அறிவித்து இருந்தார். ரூ.125 கோடியில் அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களுக்கும் தலா ரூ.5 கோடியும், இவர்கள் தவிர, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ரூ.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடியும் அறிவிக்கப்பட்டது. ஆனால், சக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2.5 கோடியே தனக்கும்போதும் எனக் கூறி ரூ.5 கோடிக்கு பதிலாக அதில் பாதியை ரூ.2.5 கோடியை மட்டும் ராகுல் திராவிட் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் திராவிட் போலவே தற்போது ரோகித் சர்மாவும் அணியின் உதவியாளர்களுக்கு சமமான பரிசுத் தொகை கிடைக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர்,” இந்திய அணியின் உதவியாளர் ஒருவர், “அணியின் உதவி பணியாளர்களுக்கு பரிசுத்தொகை குறைவாக வழங்கிய விவகாரத்தில் ரோகித்துக்கு வருத்தம்தான். உதவியாளர்களுக்கு சமமான பரிசுத்தொகை வழங்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையையும் ரோகித் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க தயார்” என்று கூறியுள்ளார்.

The post இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் வழியில் ரோகித் சர்மா.. உதவியாளர்களுக்காக பரிசுத் தொகையை விட்டுத்தர சம்மதம்!! appeared first on Dinakaran.

Related Stories: