யு எஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் யெலனா ஆஸ்டபென்கோ (லாத்வியா), லியுட்மிலா கிச்சனோக் (உக்ரைன்) இணை சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) – ஷுவாய் ஸாங் (சீனா) இணையுடன் மோதிய ஆஸ்டபென்கோ ஜோடி 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது. இப்போட்டி 1 மணி, 28 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆஸ்டபென்கோ/கிச்சனோக் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். கிச்சனோக் ஏற்கனவே 2023 விம்பிள்டனில் குரோஷியாவின் மேட் பாவிச் உடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியனாகி உள்ளார். ஆஸ்டபென்கோ 2017 பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.
The post ஆஸ்டபென்கோ கிச்சனோக் சாம்பியன் appeared first on Dinakaran.