இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு – கேரளா ஆண்கள் அணிகள் நேற்று மோதின. அதிரடியாக விளையாடிய வி. ராமதாஸ், எஸ்.சுந்தரசேன் ஆகியோர் அடித்த கோல்களால் முதல் பாதியில் தமிழ்நாடு 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு 2வது பாதியிலும் தாமரைக்கண்ணன், சதீஷ்குமார், ஏ.பி.வினோத்குமார், மெர்சிலின் டி குரூஸ், கேப்டன் ஆடம் ஆன்டனி, வி.ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோலடித்து அசத்தினர். ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு 8-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை பந்தாடி முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புதுச்சேரி ஆண்கள் அணி 2-3 என்ற கோல்கணக்கில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா 5-0 என்ற கோல் கணக்கில் இமாச்சலையும், கர்நாடகா 7-0 என்ற கணக்கில் கேரளாவையும் வீழ்த்தின.
The post முதலாவது மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் தமிழ்நாடு கோல் மழை: முதல் ஆட்டத்தில் கேரளா தோல்வி appeared first on Dinakaran.
