பிப். 29ம் தேதிக்கு பின் பேடிஎம் பேமன்ட் வங்கி செயல்பட தடை: ரிசர்வ் வங்கி உத்தரவு

மும்பை: வரும் 29ம் தேதிக்கு பிறகு வங்கியின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால் அதன் வங்கி செயல்பாடுகளை வரும் 29ம் தேதியுடன் முற்றிலும் நிறுத்த வேண்டும். இனி புதிய வாடிக்கையாளர்கள் யாரையும் சேர்க்கக்கூடாது. எந்த ஒரு கணக்கிலும் டெபாசிட், டாப் அப் பணம் பெறுவதோ கூடாது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வாலட்களில் பணம் பெறுவதோ, பாஸ்ட்டேக், என்சிஎம்சி கார்டு மூலம் பணம் பெறுவதோ கூடாது. வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, பாஸ்ட் டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பிப். 29ம் தேதிக்கு பின் பேடிஎம் பேமன்ட் வங்கி செயல்பட தடை: ரிசர்வ் வங்கி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: