28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கில் பீகார் முன்னாள் எம்பிக்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி: பீகார் மாநிலத்துக்கு கடந்த 1995ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சரண் மாவட்டம் சாப்ரா பகுதியை சேர்ந்த தரோகா ராய், ராஜேந்திர ராய் ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். ஒரு பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுநாத் சிங் உள்ளிட்டோர் மீது கொலை குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்தலில் தனக்கு வாக்களிக்காத தரோகா ராய், ராஜேந்திர ராய் இருவரையும் பிரபுநாத் சிங் சுட்டு கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2012ல் பிரபுநாத் சிங் உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என அறிவித்து பாட்னா ஐகோர்ட் விடுதலை செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கொலை வழக்கில் பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

The post 28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கில் பீகார் முன்னாள் எம்பிக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: