ராஜ்கோட்டில் 27 பேர் பலியான தீவிபத்து மாநகராட்சி மாஜி அதிகாரி வீட்டில் ரூ.19 கோடி தங்கம், பணம் பறிமுதல்

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த மே மாதம் நடந்த விளையாட்டு மைய தீ விபத்தில்27 பேர் பலியானார்கள். இந்த விபத்திற்கு முறையற்ற கட்டிட அனுமதி கொடுத்தது தான் காரணம் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ராஜ்கோட் மாநகராட்சி முன்னாள் நகரமைப்பு அதிகாரி மன்சுக் சகதியா கைது செய்யப்பட்டார். அவரது வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ரூ.16 கோடி மதிப்பிலான 22 கிலோ தங்கம், ரூ.3 கோடி ரொக்கப்பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மன்சுக் சகதியா மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 14 சொத்துகள் குறித்து விவரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவரது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் ரூ.29 கோடி என விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பெட்ரோல் பங்குகள், அகமதாபாத்தில் வீடுகள், ஒரு பண்ணை வீடு, கட்டப்பட்டு வரும் ஓட்டல், 6 வாகனங்கள் என அவர் சொத்துக்களை வாங்கிக் குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post ராஜ்கோட்டில் 27 பேர் பலியான தீவிபத்து மாநகராட்சி மாஜி அதிகாரி வீட்டில் ரூ.19 கோடி தங்கம், பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: