மம்தாவுக்கு எதிராக ஆளுநர் அவதூறு வழக்கு: 10ம் தேதி விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 27ம் தேதி தலைமை செயலகத்தில் நடந்த நிர்வாக கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ராஜ்பவனுக்குள் நடந்த சமீபத்திய சம்பவங்கள் காரணமாக அங்கு செல்வதற்கே பெண்கள் பயப்படுவதாக புகார் கூறுகிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக ஆளுநர் ஆனந்த போஸ் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணராவ் அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவில் தேவையான மாற்றங்களை சேர்த்து புதிய மனுவை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரினார். இதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் வழக்கை நேற்று விசாரணைக்கு ஒத்திவைத்து இருந்தது. இந்நிலையில் நீதிபதி கிருஷ்ணாராவ் முன்னிலையில் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வருகிற 10ம் தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

The post மம்தாவுக்கு எதிராக ஆளுநர் அவதூறு வழக்கு: 10ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: