புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் புதிய பாடத்திட்டங்கள் கட்டமைப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி, முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டான 2024-25ல் 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் மாற்றப்படும் என்றும் பிறகு படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கான பாட புத்தகங்களிலும் மாற்றம் செய்யப்படும் என என்சிஇஆர்டி அறிவித்தது.
அதன்படி, 3ம் வகுப்புக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், 6ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் இதுவரை தயாராகவில்லை.

தற்போது ஆங்கிலம், இந்தி ஆகிய இரு பாட புத்தகங்கள் மட்டுமே வெளியாகின. சமூக அறிவியல், அறிவியல், கணித பாட புத்தகங்கள் வெளியாக 2 மாதம் ஆகும் என்ற தகவல் வெளியானது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 6ம் வகுப்புக்கான புதிய பாட புத்தகங்கள் தயாரிப்பு பணி இறுதிகட்டத்தில் உள்ளது என்று ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித் தனர்.

The post புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: