சிவகங்கை, விருதுநகர் உள்பட 4 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு

சென்னை: திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறது. இது வரை கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கோவை, நீலகிரி, சேலம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, ெபாள்ளாச்சி, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளது.

இந்த நிலையில் சிவகங்கை, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான சந்திப்பு நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர்கள்-எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தொகுதிப் பார்வையாளர்கள் பாக அளவிலான பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்கள் மத்தியிலான ஆதரவு அலையை வாக்குகளாக்க உழைக்க வேண்டும். நடைபெற இருப்பது மக்களவைத் தேர்தல் என்றாலும், இது மாநிலங்களை காப்பதற்கான தேர்தல் என்பதை உணர்ந்து வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் செயலாற்ற வலியுறுத்தப்பட்டது. மாலையில் தென்காசி, திருநெல்வேலி தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.

The post சிவகங்கை, விருதுநகர் உள்பட 4 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: